வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்களின் ஆணைப்படி கிருட்டினகிரியில் சமூகநீதி – சமத்துவத்திற்கான பெரியார் நடை (மினிமாரத்தான்) உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148- ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சமூகநீதி – சமத்துவத்திற்கான பெரியார் நடை பயணம்.


11/10/2026- ஞாயிறு காலை 7.00 மணியளவில் கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகிலிருந்து தொடங்கிய பெரியார் நடை பயண (மினிமாரத்தான்) நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்தார். கிருட்டினகிரி திமுக ஒருங்கிணைந்த மாவட்ட கழகச் செயலாளர் டி.செங்குட்டுவன் Ex.MLA., அவர்கள் பெரியார் நடை பயணத்தை தொடங்கிவைத்தார்.
நிகழ்வில் கிருட்டினகிரி நகரமன்ற தலைவர் (பொ) சாவித்திரி கடலரசு மூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவர் எச். அஸ்கர் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் செ.பொன்முடிவரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் தி.கதிரவன், வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் இல. ஆறுமுகம், கி.முருகேசன், மேனாள் மாவட்டத்தலைவர்கள் பெ.மதிமணியன், த. அறிவரசன், மேனாள் மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம், மாவட்ட ப.க.செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து. ராஜேசன், நகர செயலாளர் அ.கோ. ராஜா, மாவட்ட ப.க.அமைப்பாளர் இராம. சகாதேவன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன் ஒருங்கிணைத்தார்.
பெரியார் நடை பயணத்தை மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரை, மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் ச.மணிமொழி ஆகியோர் பெரியார் நடை பேரணியை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பெரியார் நடை (மினி மாரத்தான்) பயணம் ஆர் சி பள்ளி சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக புதுப்பேட்டை 5 ரோடு ரவுண்டானா வழியாக கார்னேசன் திடல் பெரியார் மையத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் நடை பயணம் நிறைவு செய்யப்பட்டது.
பெரியார் நடை பயணம் தொடக்க முதல் நிறைவு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த ஆற்றல்மிக்க மேனாள் மாவட்ட கழக செயலாளர் டி. செங்குட்டுவன் Ex.MLA, அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழக தோழர்களுக்கு பட்டயங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயண மூர்த்தி, மேனாள் கவுன்சிலர் கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சௌந்தரராசன் உள்ளிட்ட திமுக, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பொறுப்பாளர்களும், தோழர்களும், பெரியாரிய உணர்வாளர்களும், சமூகநீதி சிந்தனையாளர்களும் பெரும் திரளாக பெரியார் நடை பயணத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார் நன்றி கூறினார்.
செய்திகள் மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777
