அனைத்து சமுதாய மக்களும் போற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றிய திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.எஸ். பீர் முகைதீனின், மக்கள் நல சேவையை கௌரவிக்கும் வகையில் புரட்சியாளர் பழனி பாபா பேரவை மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலச் செயலாளர் தாழை. என்.உமர் பாரூக் தலைமையில் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.எஸ். பீர் முகைதீனை, த.ம.ஜ.க. மாநிலச் செயலாளர் தாழை. என்.உமர் பாரூக், பொன்னாடை மற்றும் பழக்கூடை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

அப்போது தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தாழையூத்து கிளைச் செயலாளர் சேக் இப்ராஹிம் மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கணேசன், இசக்கி, இ.பி. பீர் முகம்மது, டைல்ஸ் முருகன், செல்வம், சசிக்குமார் சுந்தர், வள்ளி, அமுல் ஆகியோரும் உடன் இருந்து தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.எஸ். பீர் முகைதீனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம். கைப்பேசி எண்: 8825850212.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed