தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.எம். சண்முகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ, கே.ஆர்.ஜி.தனபால், தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளரும், சர்வதேச உரிமைகள் கழகத்தின் சேலம் மண்டல பொறுப்பாளருமான கோல்டு தேவா (எ) கே.தேவராஜ் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சேலம் நிலவாரப்பட்டி ஊன்றுகோல் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 
இவ்விழாவிற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் குருராமலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பாக அழைப்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் பொன்முடி, கோவை சுந்தரம், ஏ.எஸ்.சரவணன், தில்லைக்குமரன்,

கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், அங்குராஜ், அய்யனார், தேவகுமார், ராமமூர்த்தி, சோமசுந்தரம், ஜெயம் முருகன், செந்தில், எஸ்.கே.பி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரகாஷ், ராஜேஷ், சந்தோஷ், ரமேஷ், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் கோல்டு தேவா (எ) கே.தேவராஜ் ஊன்றுகோல் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் காலை உணவு மற்றும் வேட்டி, சேலை வழங்கினார்கள். பின்னர் நிர்வாகிகளுடன் இணைந்து முதியோர் இல்லத்திற்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

அப்போது சசிகலா தேவராஜ், ஹரிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
சேலம் மாநகர் மாவட்டம் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைகள் சங்க நிர்வாகிகள், சேலம் மண்டல சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை
9442979467.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed