கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தவெக கட்சி சார்பில் தாராப்புரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிளிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் த வெ க வேட்பாளர்களான திருமதி மரகதம் மற்றும் திருமதி சத்தியபாமா ஆகிய இருவரும் மகத்தான வெற்றி பெற்றுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட த,வெ,க செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் திரண்ட தொண்டர்கள், மேளதாளங்கள் முழங்கவும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அப்போது கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் ஒன்று திரண்டு தவெக கட்சியினர் தமிழக முதல்வருக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்து கோஷங்களை எழுப்பி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தவெக கட்சி சார்ந்த ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
செய்திகள் மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
