தலையீட்டு இதயநோய் நிபுணர் டாக்டர் அருணாசலம் தகவல்…


திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் “நெல்லை அருணா கார்டியாக் கேர்” மருத்துவமனையில் “மருந்து பூசப்பட்ட பலூன் மூலம்” நவீன சிகிச்சை அளிக்கப்படுவதாக மூத்த தலையிட்டு இதயநோய் நிபுணர் டாக்டர் அருணாசலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து, நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் நிறுவனத் தலைவரும், தலையீட்டு இதயநோய் நிபுணருமான டாக்டர் இ.அருணாசலம் கூறியதாவது:

திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் ‘ட்ரக் கோட்டட் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’
எனப்படும் (Drug Coated Baloon Angioplasty) ‘மருந்து பூசப்பட்ட பலூன் மூலம்’ அதிநவீன சிகிச்சை 127 க்கும் மேற்பட்ட மருத்துவப் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அண்மையில் ஒரே நாளில் நான்கு மருத்துவப் பயனாளிகளுக்கு ‘ட்ரக் கோட்டட் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ என்ற சிறப்புச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புச் சிகிச்சை மூலம் அடைப்புகள் உள்ள இரத்தக் குழாயின் உள்பகுதிகள் மருந்து செலுத்தப்பட்டு ‘நிரந்தர மெட்டாலிக் ஸ்டெண்ட்’ இல்லாமல் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இத்தகைய அதிநவீன சிகிச்சை இரத்தக் குழாய் அமைப்பு, அடைப்பின் தன்மை மற்றும் மருத்துவ நிலையை மதிப்பீடு செய்த இதய சிகிச்சை நிபுணரால் நிருணயம் செய்யப்படுகிறது.

நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் வழங்கப்படும் இத்தகைய அதிநவீன சிறப்புச் சிகிச்சை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
இவ்வாறு நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மூத்த தலையீட்டு இதயநோய் நிபுணருமான டாக்டர் இ.அருணாசலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது மருத்துவமனையின் நிருவாக இயக்குனர் டாக்டர் சொர்ணலதா அருணாசலம் மற்றும் பிற மருத்துவர்கள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.
கைபேசி எண்: 8825850212.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed