மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சியாம் சுந்தர்ராஜன் (36) இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் லாரிடிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது டூவிலரில் சுந்தர் சோழவந்தான் டாஸ்மாக் அருகே சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் படுகாயமடைந்த சுந்தர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த சோழவந்தான் போலீசார் இறந்த சுந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது,

சுந்தர் அப்பகுதியை சேர்ந்த உறவினரான முத்து மீனா என்ற திருமணாகி கணவரை பிரிந்த பெண்ணுடன் பழகி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், முத்துமீனாவின் இரு பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார். இதில், 15வயது மகன் தனது நண்பரான ராம்குமார் (26) என்ற நபருடன் பழகி மதுபோதைக்கு அடிமையாக மாறியதாக கூறப்படுகிறது,

இதனை வளர்ப்பு தந்தை சியாம் சுந்தர் ராஜன் தட்டி கேட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த 15 வயது வளர்ப்பு மகன் ராம்குமாருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த போது இருவரையும் போலீசார் கைது செய்தது தெரியவந்துள்ளது.

மது அருந்துவதை தட்டிகேட்ட வளர்ப்பு தந்தையை மகனே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் /. 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed