கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (05.10.2026) அன்று தேசிய தன்னார்வ இரத்ததான விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், அதிக முறை இரத்ததான முகாம்களை நடத்திய பொதுநிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

இதில், தொடர்ந்து இரத்ததான முகாம்கள் நடத்தி, இரத்ததான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் ‘நாம் ஒருவர் அறக்கட்டளைக்கும்’ விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட், துணை முதல்வர் டாக்டர் கீதா ராணி, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கிங்ஸ்லி ஜெபசிங், ஆர்.எம்.ஓ. டாக்டர் விஜயலட்சுமி, ஏ.ஆர்.எம்.ஓ. டாக்டர் ரெனிமோள், டாக்டர் கலைகுமார் மற்றும் மருத்துவக் கல்லூரி இரத்த வங்கி தலைமை மருத்துவர் டாக்டர் எம்.கே. ராகேஷ், எம்.டி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவில் டாக்டர் எம்.கே. ராகேஷ் நன்றி உரையாற்றினார். ‘நாம் ஒருவர் அறக்கட்டளை’ மேற்கொண்டு வரும் இரத்ததான விழிப்புணர்வு பணிகளை சுட்டிக்காட்டி பாராட்டிய டாக்டர் ராகேஷுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திய இரத்த வங்கி ஆற்றுனர் சிவகுமார், இரத்த வங்கி செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் : சுரேஷ் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed