.
வேலூர் மாவட்ட 108, ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு விழா மேடை அருகில் 02/10/2026 வெள்ளிக்கிழமை அன்று 11 மணியளவில் நடைபெற்றது. 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது வேலூர் மாவட்டத்தில் 26 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் களில் 125 க்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணி நேரமாக கொண்டு இரவு பகலாக பார்த்து வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை அரசு தனியார் கூட்டு பேர பங்களிப்பின் முறையில்(Public private partnership) நிர்வகித்து வரும் EMRI GHS நிர்வாகம் கடந்த நான்கு மாதங்களாக பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு சட்டவிரோத சம்பள வெட்டுடன் சம்பளம் வழங்கிவருகிறது இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் திட்ட இயக்குனரிடம் (PD) அவர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகவே உள்நோக்கத்துடன் முறையாக வேலை பார்த்த தொழிலாளர்களிடம் மேற்கொள்ளப்படும் EMRI GHS நிர்வாகத்தின் சட்டவிரோத சம்பள் வெட்டுக்கு எதிராக வேலூர் மாவட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் ஊதியம் வழங்கல் சட்டம் 1936 – யின் கீழ் புகார் அளித்து EMRI GHS நிர்வாக அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு எந்த வித சம்பள வெட்டு நடவடிக்கையும் இல்லாமல் சம்பளம் வழங்க கோருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலூம் தொடர்ந்து நிர்வாகம் உள்நோக்கத்துடன் முறையாக வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத சம்பள வெட்டு செய்யும் நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விரைவில் கள போராட்டம் அறிவிப்பதற்கு மாநில கமிட்டிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொழிற் தீர்ப்பாயத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்புகளின்படி
- சட்டபடியான 8 மணி நேர வேலை நேரத்தை எந்த வித சம்பள குறைப்பும் செய்யாமல் EMRI GHS நிர்வாகம் அமல்படுத்தாதது
2.சட்டவிரோத பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 18(1) ஒப்பந்தத்தின் படி உடனடியாக மீண்டும் பணி வழங்காதது.
- 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் பணி பார்க்கும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தனி பணியிட வசதி மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி தராதது.
- வருடாந்திர ஊதிய உயர்வு 25% மற்றும் தீபாவளி போனஸ் 8.33 % வழங்கிட வேண்டும் என்ற தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி முறையாக தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வழங்காதது
இது போன்ற நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறை படுத்தாத EMRI GHS நிர்வாக அதிகாரிகள் மீது நேர்மையற்ற தொழில் நடவடிக்கை தொழிற் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25T – யின் கீழ் அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டையும் வழங்கிட கோரி வழக்கத் தொடுப்பது எனவும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்திகள் : மூர்த்தி / எதிரொலி / 8939476777
