மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியான பி கே என் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆறு மினி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்திற்குள் வெடி வெடிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. திடீரென சத்தம் கேட்டதால் பள்ளியின் முன் பகுதியில் பணியில் இருந்த காவலர் சுந்தர்ராஜன் விரைந்து சென்று சத்தம் வந்த இடத்தில் பார்த்த போது, இரண்டு பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு நிலை அதிகாரி உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பேருந்துகளில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இரண்டு பேருந்துகளும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது.

சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் ஆறு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அருகருகே இருந்த இரண்டு பேருந்துகள் மட்டும் தீப்பற்றி எரிந்தது மற்ற பேருந்துகள் 20 அடி தூரத்தில் தள்ளி நிறுத்தப்பட்டிருந்ததால் மீதம் இருந்த நான்கு பேருந்துகள் தீ விபத்தில் சிக்கவில்லை. விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சனிக்கிழமை பள்ளி 6 ம் வகுப்பு மாணவிகளை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று இரவில் வந்து பேருந்துகளை நிறுத்தி வைத்ததாகவும், இதனால் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. விடுமுறை தினம் என்பதாலும் இரவு நேரத்தில் பேருந்துகள் தீப்பற்றியதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதே பள்ளி பேருந்து ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் நான்கு வழி சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த போது தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed