கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கு.கணேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
சம்பளத்தில் 20% வழங்கி வருதல்
தன்னுடைய சம்பளத்திலிருந்து 20 சதவீதத்தை (பிடித்தம் போக) தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்காக 25 ஆண்டுகளாக வழங்கி வருகிறார். குறிப்பாக தாய் தந்தை இழந்த, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள, மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் கல்வி செலவிற்காக வழங்கி வருகிறார்.
தான் பணியாற்றுகின்ற பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பல்வேறு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கும் தொடர்ந்து உதவி வருகிறார். கல்விப்பணி மட்டுமின்றி விடுமுறை நாட்களில், மாலை வேலைகளில், ஓய்வு நேரங்களில் பல்வேறு சேவைப் பணிகளை தானாக முன்வந்து 20 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறார்.
இட்டு வைப்பு திட்டம் ;
வங்கியில் இட்ட வைப்பு திட்டத்தின் மூலம் நிதியை டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டியை வைத்து ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுகின்ற பணியை செய்து வருகிறார்
இலவச சட்ட ஆலோசனை வழங்குதல் ;
வழக்கறிஞரான இவரது மனைவி த.பிரபாவதி உதவியுடன் மூன்றாம் பால்இனத்தவர், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
திருமண சீர் வழங்குதல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட, தாய் தந்தை இழந்த, மாற்றுத் திறன் கொண்ட பெண்களுக்கு திருமணம் செய்யும்பொழுது திருமண சீர் வழங்கி வருகிறார்.
கல்லூரி கட்டணம் செலுத்துதல்
கல்லூரி கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கு தன்னால் இயன்ற அளவுக்கும் நல்ல உள்ளங்களிடம் நிதி உதவி பெற்றும் கல்லூரி கட்டணங்களை கொடுத்து உதவி வருகிறார். கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது
சொல்வதை எழுதுபவர் பணி
பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் பணியும் செய்து வருகிறார்.
விருது மற்றும் பதக்கம் வழங்குதல்
மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, கல்வித்துறை, மின்சாரம் பராமரிப்பு துறை, வனத்துறை உட்பட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களை ஊக்கப்படுத்துவதற்காக விருது மற்றும் பதக்கங்களை பல வருடம் வழங்கி வருகிறார்.
தொழில் செய்ய உதவுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்வதற்காக மூலப்பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார்.
மூன்றாம் பாலினத்தவர்க்கு தொழில் செய்ய ஊக்கம் தருகிறார்.
முதலுதவி பொருட்கள் வழங்குதல்
பல்வேறு அரசு பள்ளிகளுக்கு முதலுதவி பெட்டி மற்றும் முதலுதவி பொருட்கள் வழங்கி உள்ளார்.
புரவலரை சேர்த்தல்
பல்வேறு பள்ளிகளில் தன்னை புரவலராக இணைத்துள்ளார். ஊத்தங்கரை ஆண்கள் பள்ளியில் புரவலராக பலரை இணைந்து உள்ளார்.
தேச தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாடுதல்
மகாத்மா காந்தியடிகள், கர்மவீரர் காமராசர் உட்பட பல தேசிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நல உதவிகள் வழங்கி வருகிறார்.
மத நல்லிணக்க நிகழ்ச்சி நடத்துதல்
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோயில், மசூதி, தேவாலயம் சென்று அனைத்து பண்டிகைகளும் கொண்டாடி வருகிறார்.
விளையாட்டு வீரர்களுக்கு உதவுதல்
விளையாட்டு வீரர்களின் திறனை வெளிப்படுத்த அவர்களுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்கள், முதலுதவி பொருட்கள் மற்றும் சீருடைகள் வாங்கித் தருகிறார்.
தூய்மை பணியாளர்களுக்கு உதவுதல் ஊத்தங்கரை தூய்மை பணியாளர்களுக்கு வருடம் நான்கு முறை புத்தாடைகள் வழங்கி வருகிறார். 70 தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை பரிசுகள் மற்றும் உணவு வழங்கி வருகிறார்.
மருத்துவ உதவி செய்தல்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாதந்தோறும் மருந்துகள் வாங்கித் தருதல் அறுவை சிகிச்சை செல்லும் பொழுது நிதி உதவி வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் பல ஆண்டுகள் நடைபெற்று வருகிறது
இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்தல்
பள்ளி விட்டு இடையில் என்ற மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியையும் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்
இரத்த தான முகாம் நடத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், உட்பட பல்வேறு நல்ல நிகழ்வுகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.
மேற்கண்ட சேவைகளை தன்னுடைய சம்பளத்திலிருந்தும் பல்வேறு நல்ல உள்ளங்களிடம் நிதி உதவி பெற்றும் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.
மாறுவேடத்தில் பாடம் நடத்துதல்
மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பொழுது மகாத்மா காந்தி, திருவள்ளூர், பாரதியார், எம். ஜி. ஆர் உட்பட பல்வேறு மாறு வேடங்கள் அணிந்து பாடங்களை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி த.பிரபாவதி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரும் இலவசமாக பலருக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரது மூத்த மகன் ஹரிஹரன் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் ரிஷ்வந்த் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்ற கூற்றுக்கு ஏற்ப ஆசிரியர் பணியை கடமையாக எண்ணாமல் உயிர்மூச்சாக எண்ணி பணியாற்றி வருகிறார் ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன். இவர் ஓய்வு நேரங்களில், விடுமுறை நாட்களில் மேற்கண்ட சேவைகள் செய்து வருகிறார். மாணவர்கள் மனதில் சேவை மனப்பான்மை உருவாக்க ஜேஆர்சி ஆசிரியராக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
