ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ, ராக்கச்சி அம்மன் கோயில் வனப்பகுதியை நோக்கி வேகமாக பரவி வருவதால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில் அருகே 3 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீ மலை முழுவதும் பரவி, ராஜபாளையம் அருகே ராக்காச்சி அம்மன் கோயில் வனப்பகுதி நோக்கி வேகமாக பரவி வருவதால் வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். ராஜபாளையம் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
