வில்லிபுத்தூரில் கண்ணன் பிறப்பையொட்டி பள்ளி பிள்ளைகளுக்கு மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி பிள்ளைகளுக்கு மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டன. பென்னிங்டன் பாலர் பள்ளியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்காக கண்ணன் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை உப தலைவர் வி. முத்து பட்டர் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி முதல்வர் முத்துலட்சுமி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். வழக்கறிஞரும் எழுத்தாளருமான எஸ். ரமேஷ் துவக்க உரை நிகழ்த்தினார். ஆசிரியை முனீஸ்வரி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து, சிறு குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டிகள் நடந்தன. இதில் கிருஷ்ணன், ராதை, பாமா, ருக்மணி, ஆகிய வேடங்களில் தோன்றிய சிறுவர் சிறுமிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர். இப்போட்டியில் வென்றவர்களுக்கு பள்ளியின் செயலாளர் ஐ.டி.சி. சிவக்குமார், உப தலைவர் முனைவர் ஜெயக்குமார், கமிட்டி உறுப்பினர் “சித்தாந்த ரத்தினம்” கோவிந்தன், மற்றும் எஸ். ரமேஷ் ஆகியோர் பரிசு வழங்கினார்கள். பென்னிங்டன் பாலர் பள்ளியின் ஆசிரியைகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

நமது பாரத தேசத்தின் கலாச்சாரத்தை பிரதிபலித்த விழா இதுவென்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி/

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed