திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே உள்ள கடற்கரை கிராமமான கோரை குப்பம் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை,எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில் கேப்டன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை காட்டப்பட்டது. பின்பு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு கூடியிருந்தவர்களுக்கு பிறந்தநாள் கேக் வழங்கப்பட்டது.

பின்னர், அப்பகுதியில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி செய்து கிராம மக்கள் அனைவருக்கும் அதனை கட்சி நிர்வாகிகள் வழங்கினர். மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செய்த செயலாளர் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கேப்டன் மன்ற பொதுச்செயலாளர் ஜாகிர் உசேன், பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் குமார், பிரளயம் பாக்கம் ஊராட்சி செயலாளர் சாம்பசிவன்,

கடமஞ்சேரி கிராம செயலாளர் வெங்கடேசன், கோரை குப்பம் கிளைகழக நிர்வாகிகள் சந்திரசேகர்,தணிகாசலம்,வாசு,பஞ்சநாதன்,தேசப்பன்,உதயன்,ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

