கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கோபிநாத் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த கண்டன அமைதிப் பேரணி நடைபெற்றது
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய இந்த அமைதிப் பேரணியானது லண்டன் பேட்டை, நேதாஜி ரோடு , பழையபேட்டை, காந்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக சென்ற போது மக்களிடைய மத்திய பாஜக அரசு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பாதிக்கும் வகையிலும் வட மாநிலங்கள் பலனடையும் வகையிலும் தொகுதி மறுவரையரை மசோதாவை தாக்கல் செய்ய உள்ள இந்த மோசடி மசோதாவால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறு வரை மசோதாவை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்பேது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம். சி, ரகு தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணிக்கு நகர தலைவர் லலித் ஆண்டனி, மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பாவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் அக. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.சி. சேகர், சேலம் மண்டல ரயில்வே கோட்ட உறுப்பினர் தளபதி ரகமத்துல்லா, முன்னாள் எஸ்.சி, எஸ். டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பரமணி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, டாக்டர் தகி, ரமேஷ் அர்னால்டு, அப்சல், மாவட்ட மகளிர் அணி தலைவி உமாசங்கரி, வட்டார தலைவர்கள் நஞ்சுண்டன், தனஞ்செயன், செல்வராஜ், ஸ்ரீராம், கோபாலகிருஷ்ணன், கல்லாவி ரவி, சித்திக், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஷபிக் அஹமத், சக்கரவர்த்தி, அஜித் பாஷா, கவியரசன், மத்தூர் அனுமந்தன், மாரியப்பன், தனசேகர், சின்னசாமி, ஜமால், சபாபதி ,மூயின், ஜெயவேல், பூபதி, முஸ்தாக், முனவர், இஸ்மாயில், சதாசிவம், வின்சென்ட், வெங்கடாசலம், ரங்கசாமி, ஏழுமலை, திம்மராயன், சங்கர், விஜய்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
