ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருவிழா காலங்களில் போது ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் தினமும் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் தினமும் ஒரு வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடைபெறும் அந்த வகையில் திருவிழா காலங்கள் போது கோவர்த்தன கிரி வாகனத்திலும் ஆண்டாள் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

இந்த நிலையில், கோவர்த்தன கிரி வாகனம் மிகவும் பழமையானதாக ஆனதால், உபயதாரர் மூலமாக புதிய வாகனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆண்டாள் கோவிலுக்கு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு கோவர்த்தன கிரி வாகனம் வந்துள்ளது. புதிதாக வந்துள்ள வாகனத்தை கோவிலுக்கு வரும் ஏராளம் மான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed