இன்றைய டிஜிட்டல் உலகின் சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் புதிய முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக “செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த போதை விழிப்புணர்வு பிரம்மாண்ட சங்கமம் ” என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி ஜூன் மாதம் 25 ஆம் தேதி நாகர்கோவில் அமைந்துள்ள ஆற்றுப்படுத்துதல் பணியாகம் KDCM அருள் வாழ்வு இல்லம் பிஷப் கேம்பஸில் நடைபெற இருக்கிறது.

போதை பழக்கத்தினால் சமூகத்தில் உருவாகும் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களான* chat GPT” ” Gemini AI” உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி விழிப்புணர்வை எவ்வாறு விரைவாகவும் உலகளவிய அளவிலும் பரப்ப முடியும் என்பதை பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் முன்னோடி நிகழ்வாக இது அமைகிறது .
இந்த நிகழ்வில் மூலம் ஒவ்வொரு தனிநபரும் ” AI” கருவிகளை பயன்படுத்தி போதை எதிர்ப்பு போஸ்டர்கள், விழிப்புணர்வு பாடல்கள், குறும்படங்கள், தகவல் வரைபடங்கள், சமூக வலைதள பதிவுகள், குரல் அறிவிப்புகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை உருவாக்கி சமூக ஊடகங்கள் வழியாக ஆயிரக்கணக்கான மக்களை சென்றடைய முடியும் என்பதை செய்முறை விளக்கங்களுடன் அறிமுகப்படுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த நிகழ்வு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சமூக பயன்பாடு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் முன்னோடியாக முயற்சியாக அமையும் போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் இளைஞர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் ; சுரேஷ் /. எதிரொலி / 8939476777
