தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்தின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்-ன் பிறந்தநாளினை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள தவெக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமினை மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மோற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.
மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் டாடா, டிவிஸ், அசோக் லைலண்ட் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னனி நிறுவனங்களில் இருக்கு சுமார் 51 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்தனர். தமிழக முதல்வரின் பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படித்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்’.

இந்நிகழ்ச்சியில், கழக மாவட்ட இணை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் ரத்தினவேல், மாணவரணி அமைப்பாளர் அருள்குமார், உறுப்பினர் சேர்க்கை அணி அமைப்பாளர் பிரகாஷ், இணை அமைப்பாளர் சிபி சச்சின், மருத்துவர் அணி பார்த்திபன், கழக நிர்வாகிகள் தென்னரசு,வேலன், மகளிர் அணி இந்திராநாகராஜ், மகேஸ்வரி, நேத்ரா, சுமதி, கீர்த்தனா , வினோதினி, வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஒன்றிய இணை செயலாளர் ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் திம்மராஜ், பசுவராஜ், பார்த்தசாரதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மகேந்திரன், ராஜு, ஹரிபிரசாத் கிருஷ்ணகிரி நகர கழக நிர்வாகிகள் சரவணன், ரேணுகுமார், ஜெய் ஆனந்த், ஏஜாஸ், முஹமத் ஷபீர், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் தமிழக வெற்றிக்கழக சார்பில் நடைபெற்ற இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டார்கள்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
