மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மதுரையின் மத்திய பகுதியாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கிய நிலையில்,கருடர் பாலம் பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது.

காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை விதித்த போதிலும்,அவ்வழியே சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் காவலர்களுடைய அறிவுரையை மீறி தண்ணீருக்குள் சென்ற நிலையில்,பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று தண்ணீரில் சிக்கிக் கொண்டது

இந்த நிலையில் அவ்வளியே சென்ற இளைஞர்கள் ஆட்டோவை பின்புறமாக தள்ளி கரை சேர்த்தனர். (பாசக்கார மதுர பயலுக ) இருசக்கர வாகன ஓட்டிகள் காவலர்களுடைய அறிவுரையையும் மீறி தண்ணீரில் தத்தளித்தவாறு வருகை தந்த நிலையில் வாகனம் பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது

குறிப்பு -மாநகராட்சி மின் மோட்டார் மூலம் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வந்தாலும் காவல்துறையினர் அறிவுரையை மீறி வாகன ஓட்டிகள் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed