தமிழ்நாட்டில் சட்டப் பேரவையில் இதுவரை ஆண்ட கட்சிகள் பட்டியலினத்தில் திறமையாளர்கள் இருந்தாலும், சிலருக்கு மட்டுமே இதுவரையில் அமைச்சர் பதவிகளை வழங்கி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வந்தது. திறமை இருந்தாலும், கூடுதல் பிரதிநிதித்துவம் அளி்காமல் இதுவரை புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், திறமைசாலிகளைக் கண்டறிந்து 7 பேருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய முதல்வர் சி.ஜோசப் விஜயை மனதாரப் பாராட்டுகிறோம் என்று இந்திய குடியரசு கட்சி மண்டலச் செயலாளர் இரா.சி.தலித்குமார் கூறினார்.
இதுகுறித்து, இரா.சி.தலித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று அந்தக் கட்சியின் தலைவர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் 21.5.2026-அன்று நடைபெற்றது.
இதுவரையில் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தபோது, அதிகபட்சமாக 4 பேர் வரையிலேயே அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. திறமைசாலிகள, தகுதியானவர்கள் இரு்தாலும், கூடுதல் பிரதிநித்துவம் அளிக்காமல் வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர்.
தற்போது திறமைசாலிகளையே அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்கள் என்பதைப் பார்க்கும்போது, மனதார அவரை பாராட்டத் தோன்றுகிறு.
தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, தவெக (தமிழக வெற்றி கழகம்) கூட்டணியின் இந்த அமைச்சரவையில் 20% க்கும் அதிகமானோர் பட்டியலினத்தவர்கள் உள்ளனர்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான ராஜ்மோகன், லோகேஷ், மதன்குமார், கமலி, காந்திராஜ், தென்னரசு, ஆகிய அமைச்சர்களை பாராட்டுவதோடு, அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்,
இவர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேரக்கும் வகையில் பணி அமைய விரும்புகிறோம். 3 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் பெண்கள் என்று இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

இந்த நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் மாவட்டம், முன்புவட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. இந்த மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது வேதனையை அளிக்கிறது.
இதோடு, பட்டியலின மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்டு பட்டியலின மக்களுக்கே வழங்க வேண்டும், பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை முறையாக தமிழ்நாடு அரசு செலவிட வேண்டும், சாதி மாறி திருமணம் செய்வோரை கொலை செய்யும் ஆணவக் கொலையை தடுக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும், பட்டா இல்லாத பட்டியலின குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முதல்வர் சி.ஜோசப் விஜய் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு இரா.சி.தலித்குமார் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : மூர்த்தி / எதிரொலி / 8939476777
