மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் கரையான் பட்டி அருள்மிகு ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ கொண்டாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவை ஒட்டி ஸ்ரீ ராம் சுப்பிரமணியன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினர்.

இரண்டு கால யாக பூஜைகள் நிறைவுற்று வியாழக்கிழமை காலை 9:30 மணி அளவில் கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ கொண்டாயி அம்மன் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ கொண்டாயிஅம்மன் கரையான் பட்டி ஸ்ரீ கருப்புசாமி ஆகிய தெய்வங்களை வழங்கும் பங்காளிகள் சி புதூர் கொண்டயம்பட்டி கொடிமங்கலம் மதுரை தாத கவுண்டன்பட்டி கூலப்பாண்டி கருவனூர் கீழக்குயில்குடி பக்தர்கள் செய்திருந்தனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed