சென்னை -101, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், 104வது வட்டம், 8வது மண்டலம், வி 5, திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் 20க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. சாலையில் பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

நடை பாதையில் செல்ல முடியாமல், சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இது பற்றிய புகாரை 104வது வட்ட உதவி செயற்பொறியாளர் (A.E.), 8வது மண்டல அதிகாரி சென்னை பெருமாநகராட்சி புகார் பிரிவு எண்ணிலும் பலமுறை புகாரை பதிவு செய்தும் மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு நிரந்தரமாக நடைபாதை கடைகளை அகற்றி நடைபாதை நடப்பதற்கே என்ற பலகையை இரு பகுதியிலும் அமைக்க வேண்டும்.

செய்திகள் : சமூக ஆர்வலர் : ந. கோதை ஜெயராமன் / வரதராஜபுரம், நசரத்பேட்டை அஞ்சல், சென்னை
