தெற்கு வாசல் விமான நிலையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மாநகர காவல் உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை

மதுரை கீரைத்துறை ஓட்டு கால வாசல் , முகைதீன் ஆண்டவர் நந்தவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தெற்கு வாசல் N M R சுப்புராமன் பாலத்தில் திடீரென சாலை மறியல் செய்தனர் .

அதனைத் தொடர்ந்து கீரை துறை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு பழைய குழாய்களில் தண்ணீர் வேண்டும் என்றும் புதிய குழாய்களில் முறையாக தண்ணீர் வருவதில்லை என்றும் இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களாக இது குறித்து மாநகராட்சி அவரிடம் கூறி வந்த நிலையில் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல் ஈடுபட்டதாக கூறினார்.

அதனை தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதனால் தெற்கு வாசல் விமான நிலையம் சாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed