மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இலக்கியப் பூங்கா சார்பாக, புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் புத்தக மதிப்புரை நடைபெற்றது.
அதில், 6 ம் வகுப்பு முதல், 11-ம் வகுப்பு வரை பயிலும் 24 மாணவர்கள் இலக்கியம், அறிவியல், வணிகம் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற 24 புத்தகங்களை மதிப்புரை செய்தனர்.

தலைமையாசிரியர் ஷேக்நபி புத்தக மதிப்புரை செய்த மாணவர்களை பாராட்டினார். இந்நிகழ்ச்சியினை அந்த பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை / எதிரொலி / 8939476777
