இன்று பொன்னேரியில், சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அயராது பாடுபட்டவருமான அன்பு தோழர் அய்யா, நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டி,

கம்யூனிஸ்ட் மற்றும் திமுக அதன் தோழமை கட்சியினர் பொன்னேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து, பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலையின் முன்பாக, அய்யா நல்லகண்ணு புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

அந்த அமைதி ஊர்வலத்தில், பொன்னேரி திமுக நகரச் செயலாளர் ரவிக்குமார், முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதீஸ்வரன், வாசகர், ராமு, கம்யூனிஸ்ட் தோழர்கள் மாவட்ட நிர்வாகி கோபால், சேகர், கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் காளமேகம், புரட்சிதாசன், ருக்குமாங்கதன், பிரேம்குமார், பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தோழர் ஜீவா தலைமை தாங்கினார். அதில், திமுக நகர செயலாளர் ரவிக்குமார், திராவிட கழக செயலாளர் அருள், வீசிக நகர செயலாளர் தோழர் லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதி செயலாளர் சேகர், காளமேகம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் எஸ் கோபால் ஆகியோர் ஐயா அவர்களுடைய நினைவை போற்றும் விதமாக, உரையாற்றினார். இறுதியில், தோழர் கே கிருஷ்ணன் நன்றி கூறினார்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed