பள்ளி மாணவர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி மாணவர்களை குஷிபடுத்தி தானும் குஷியான வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இரண்டு மகளிர் விடியல் பயண பேருந்து புதிதாக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் விடியல் பயண பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.


அப்பொழுது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பள்ளி மாணவர்கள் அமைச்சரை கண்டதும் ஓடிவந்து எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்கு தான் எங்க ஓட்டு என மாணவர்கள் கோரசாக கோரிக்கை வைத்தனர்.
பள்ளி மாணவர்களின் கோரிக்கையினை கேட்ட அமைச்சர் உடனே அங்கு இருந்த போக்குவரத்து அதிகாரிகளை கூப்பிட்டு மாணவர்களின் கோரிக்கையினை நாளை முதல் செயல்படுத்துங்கள் என உத்தரவு பிறபித்தார்.


அதனை கேட்ட பள்ளி மாணவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கை குளுக்கினர்.
பின்னர் வடலூர் சென்று வள்ளலார் சத்திய ஞானசபையில் சிறிது நேரம் வள்ளலாரை தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார், வடலூர் நகராட்சி சேர்மன் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், வடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


எதிரொலி / 8939476777
