கடந்த 2024 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த திருக்கோவிலூரை சேர்ந்த கார்த்திக்சாம், என்பவர் கத்தார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி உடன் வேலை பார்த்த சசிதரன் என்பவரிடமும், அதிகமாக ஆட்கள் கத்தார் வேலைக்கு தேவை என்று கூறி கடலூர் மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை ஏமாற்றி உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகியும் வெளிநாட்டுக்கும் செல்லாமல் பணத்தை கேட்டாலும் முறையாக பதில் சொல்லாமல் கார்த்திக்சாம் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர்.

வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையில் முழுமையாக நம்பி கடன் வாங்கி பணம் கொடுத்தோம்,தற்போது இரண்டு ஆண்டுகளாகியும் பணம் கிடைக்கவில்லை, ஏமாற்றிய நபருக்கு போன் செய்தால் கூட அவர் பிளாக் செய்து விட்டார்.
உரிய விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எதிரொலி / 8939476777
