கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உண்டான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்கள் வெளியிட்டார்கள். இதில் 15 லட்சத்து 54 ஆயிரத்து 40 வாக்காளர்கள் உள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின உத்தரவின்படி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தளி, ஓசூர், ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தளி, ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..

இதில் ஆண் வாக்காளர்களாக 7 லட்சத்து 76 ஆயிரத்து 318 வாக்காளர்களும், பெண் வாக்காளர்களாக 7 லட்சத்து 77 ஆயிரத்து 458 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 264 வாக்காளர்களும் உள்ளனர். ஆக மொத்தம் கிருஷ்ணகிரி மாவட்த்தில் 15 லட்சத்து 54 ஆயிரத்து 40 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட 1,140 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியின் முன்பாக மாவட்டத்தில் 16 லட்சத்து 80 ஆயித்து 626 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 15 லட்சத்து 54 ஆயிரத்து 040 வாக்காளர்கள் உள்ளனர். 1 லட்சத்து 26 ஆயிரத்து 586 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார்.

அப்போது காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் எம்.சி ரகு, தேசிய மக்கள் கட்சி தலைவர் சந்திரமோகன், அதிமுக கட்சியை சேர்ந்த நகர செயலாளர் கேசவன். தேமுதிக கட்சியை சேர்ந்த ஓன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சேர்ந்த ஏராளமானவர்கள் இருந்தனர்.

செய்திகள் : மாருதி – மனோ கிருஷ்ணகிரி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed