தமிழகத்தில் மகா சிவராத்திரி விழா பல்வேறு சிவாலயங்களில் மிக விமர்சையாக கோலாலமாகவும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரியை முன்னிட்டு நடராஜபெருமானையும் சிவகாமசுந்தரி தாயாரையும் தரிசனம் செய்ததற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தாமரைப்பூ, வில்வ இலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்று சுவாமிகளுக்கு பூஜை செய்வதற்கு வழங்க செய்து அணிவித்து பூஜை செய்தனர்.
பொதுமக்கள் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கோவில் வளாகத்தில் உள்ள நெய் விளக்கு போடும் இடத்தில் விளக்கேற்றி பொதுமக்கள் வேண்டுதலை நிறைவேற்றி சென்றனர். மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமதியது குறிப்பிடத்தக்கது.


எதிரொலி / 8939476777
