தேசிய அளவிலான லோலர் ஸ்கேட்டிங் போட்டி கோவாவில் உள்ள மடுக்கோன் ஆர்.எஸ்.எஃப். ஐ மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று. தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கங்களை வெற்று சாதனை படைத்து ஆர்.எஸ்.மங்கலம் ஊருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு, பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கோவாவில், நடைபெற்ற மேற்கண்ட போட்டியில் தமிழ்நாடு, பாண்டிசேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான (மாணவர்கள் ) வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து தலைவர் ஜோதிபாசு தலைமையில், 44 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், சிவகங்கை மாவட்ட ஸ்போர்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் அகடாமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அதில், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த கிஷோர் (8) ரோகித் (7), ஜூடு (7) ஆகிய 3 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் முழு திறமையையும் காட்டி விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெடல் மற்றும் பாராட்டு சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

முதலாவதாக ரோகித் (7) என்ற மாணவர் தங்கப் பதக்கமும், இரண்டாவதாக ஜுடு என்ற மாணவர் வெள்ளி பதக்கமும், மூன்றாவதாக கிஷோர் (8) என்ற மாணவர் வெங்கலப் பதக்கமும் பெற்று அசத்தியுள்ளனர். அதே போல் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முஸ்ப்ரா என்ற மாணவர் தங்க பதக்கமும் பெற்றுள்ளனர். தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பயிற்சி அகடாமி தலைவர் ஜோதிபாசு, பயிற்சி ஆசிரியர் பாலமுருகன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறி பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கை செய்தியாளர் : கோட்டைச்சாமி / எதிரொலி / 8939476777

