மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் – லிங்கம்மாள் தம்பதியினர் இவர்களது மகன் ஹிதேஷ் சேது பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று வருகிறார். ஹிதேஷ் கடந்த 7 வருடங்களாக மதுரை ரைபிள் கிளப் மையத்தில் துப்பாக்கி சூடுபயிற்சி பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

ஹிதேஸ் துப்பாக்கி சுடுவதில் தனித் திறமையை கண்டு அதிகரிகள் மத்திய அரசு கேளாத திட்டத்தின் மூலம் அவரை தத்தெடுத்து சிறப்பு பயிற்சிகள் வழங்கியது . இதனை அடுத்து ஹிதேஷ் சர்வதேச ஜினியர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கெடுக்க பயிற்சி பெற்றார் .

ஜெர்மனியில் உள்ள சுஹ்ல் நகரில் நடைபெற்ற ISSF உலக சாம்பியன்ஷிப்
போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மூவர் குழுவில் இடம் பிடித்த ஹிதேஷ் 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன்ஸ் ஜூனியர் ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

உலகச் சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் என்ற பொறியியல் மாணவர் ஹிதேஷ்க்கு மதுரை விமான நிலையத்தில் மதுரை ரைபில் கிளப் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

மதுரை ரைபிள் கிளப் செயலாளர் வேல் சங்கர் மற்றும் பொருளார் கிஷோர் பதக்கம் வென்ற ஹிதேஷ் தாயார் லிங்கம்மாள் மகிழ்ச்சியுடன் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed