ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் ஊராட்சியில் , தமிழ்நாடு குறு - சிறு , நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா , தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ்  ஆகியோர் புதிய வழித்தட நீட்டிப்பு சேவையை துவக்கி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.
   
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பெரியபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு புதுக்குளம் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மாணவர், மாணவியர்கள் பள்ளி , கல்லூரிக்கு சென்றுவருவதற்கும், கிராமப் பொதுமக்கள் வெளியூர் சென்றுவருவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருவதாக  தமிழ்நாடு முதலமைச்சருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர், மாணவியர்கள்,  பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையொட்டி,
    
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே .ராஜீவ் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் தெற்கு புதுக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து பேருந்து இயக்கப்படும் என தெரிவித்தார்.
  
அதனை தொடர்ந்து , பெரியபட்டினத்தில் தமிழ்நாடு குறு -  சிறு , நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா , தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ்  ஆகியோர்:
  1. அரண்மனை – பெரியபட்டினத்திற்கு தெற்கு புதுக்குடியிருப்பு வழியாகவும்
    2.பெரியபட்டினம் – அரண்மனைக்கு தெற்குபுதுக்குடியிருப்பு வழியாகவும் புதிய வழித்தட நீட்டிப்பு சேவையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷுநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ. ஃபிபூர் ரஹ்மான் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ரவிக்குமார், துணை மேலாளர்கள் வணிகம் – பத்மகுமார், தொழில்நுட்பம் – சண்முகம், கிளை மேலாளர் தெய்வேந்திரன், உதவி மேலாளர் பாலமுருகன், செய்தி- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .

    மாமுஜெயக்குமார்.
    மாவட்ட செய்தியாளர்.

    By admin

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You missed