தேசிய ஆசிரியர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சேலம் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பரந்தாமன் மற்றும் நிர்வாகிகள் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சருக்கு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்சிடிஇ) அறிவிப்பாணை 23.8.2010ல், அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் உச்சநீதிமன்ற சீராய்வு மனு தீர்ப்பாணையில் பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தேசிய ஆசிரியர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகவே மத்திய அரசின் மழைக் கால பாராளுமன்ற கூட்டத் தொடரில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009ல் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவந்து தீர்வுகாண வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். கடிதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் பெற்றுக்கொண்டார்.

சேலம் செய்தியாளர் கா.தங்கதுரை /
9442979467
