பல்வேறு கட்சியிலிருந்து விலகி, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் கே.பி.என்.ஹரிஷ், கே.பி.எல் கபில், முரளிதரன், பிரசாந்த், சந்திரன், ரமேஷ், ராஜேஷ், முனீர், ஆகியோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இன்று தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி டான்சியில் உள்ள தவெக மாவட்ட அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மைய மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று, சால்வை மற்றும் கழகத் துண்டினை அணிவித்தார். பின்னர் புதிதாக இணைந்துள்ளவர்களின் கட்சிக் கொடியினை பொருத்தி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினவேல், ஹேமப்பிரியா, கழக நிர்வாகிகளான தென்னரசு, வேலன், ஏஜாஷ், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed