திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற நிலையில் தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்து செய்தியின் எதிரொலி காரணமாக மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

மேலும் சாம்பார் சாதம் வெண்பொங்கல் சாம்பார் பச்சரிசி போன்ற உணவுகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்கு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது

திருப்பரங்குன்றம் பேரூந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் உள்ளது. அம்மா உணவகம் அருகே தினசரி காய்கறி சந்தை உள்ளது இந்நிலையில் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் கடந்த 15 நாட்களாக சாப்பிட செல்லும் பொதுமக்கள் கை கழுவும் இடம் வேலை பார்க்கமால் இருந்தால் அம்மா உணவகத்தின் நடைபாதையில் கை கழுவி வந்தார்கள் .

இந்த கழிவுநீர் ரோட்டில் சென்று தினசரி சந்தையான காய்கறி மார்க்கெட் முன்பதாக தேங்குவதால் துர்நாற்றம் ஏற்பட்டு அங்கு ஈ கொசுக்கள் அதிகமாகின்றன . இதனால் அங்கு சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தினசரி காய்கறி மார்க்கெட் வரும் பொதுமக்களும் அம்மா உணவகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அவல நிலையில் உள்ளது.

மேலும் அம்மா உணவகத்தின் சாப்பாடு தரமற்ற நிலையில் இருப்பதாக கைத்தறி நகரை சேர்ந்த ஸ்ரீதேவி தெரிவித்து இருந்தார். இது குறித்து நேற்று செய்திகள் வெளியான நிலையில் அதன் எதிரொலியாக இன்று காலை மதுரை மண்டலம் 5 மாநகராட்சி உதவிஆணையாளர் ஸ்ரீதேவி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்து அதில் எந்த உணவுகள் தரம் குறைவாக உள்ள உணவுகளை அதனை சீர் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமன் திருப்பரங்குன்றம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மோகன் முருகேசன், ராஜேந்திரன், ஆகியோர் வந்து ஆய்வு செய்து சாம்பார் சாதம் வெண்பொங்கல் சாம்பார் பச்சரிசி போன்ற உணவு பொருள்களை மாதிரி எடுத்து ஆய்வக அலுவலகத்திற்கு உணவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த உணவு எப்படி உள்ளது என்பதற்கான தர ஆய்வு குறித்த விரிவான அறிக்கை 15 நாட்களுக்குப் பின்பு தெரிய வரும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed