ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.305.228 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டதுடன் வட்டாட்சியரை அலுவலர் இருக்கையில் அமர வைத்து சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் தரைதளம், முதல்தளம், தலைவாயில் , வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதல் தளத்தில் எழுதுபொருள் அறை, வட்டாட்சியர் (வட்ட வழங்கல் அலுவலர்) அறை, வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்), வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), பதிவு அறை, அலுவலகம், கூட்ட அரங்கு உள்ளிட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் , திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சீனிவாச சேதுபதி , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் , உதவி செயற்பொறியாளர் அருணகிரி , பொறுப்பு வட்டாட்சியர் உமாமகேஸ்வரி , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
