கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தேர்தலுக்குப் பிந்தைய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.சின்னராஜ், மற்றும் மாவட்டக் கழகவைத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் தலைமையில் காவேரிப்பட்டினத்திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது சிறப்புரையாற்றிய மாவட்ட கழக செயலாளர் சின்னராஜ், கிழக்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலர் தேர்தலில் கடுமையாக உழைத்ததாகவும், ஒரு சில நிர்வாகிகள் பதவியைப் பெற்றுக் கொண்டு கழகப் பணியில் செயல்பட தவறியதாகவும் குற்றம் சாட்டினார். அவ்வாறு செயல்படாதவர்கள் அடையாளம் கண்டு தலைமைக்கு தெரியப்படுத்த விருப்பதாகவும் பேசினார்
மேலும் வருகிற 25, 26, 27, ஆகிய தேதிகளில் கழக நிறுவனத் தலைவரான கேப்டன் ஆலயத்தில் அன்னதானம் செய்ய இருப்பதாகவும், அதற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு தந்து அன்னதான நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்ன் கரத்தை வலுப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், நகர ஒன்றியங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழகக் கொடியினை பல்வேறு இடங்களில் ஏற்றி, பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றிடவும், அதேபோல் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டிடவும், நிர்வாகிகள் தவறாமல் கழகப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு வரவேற்பு உரையாற்றினார்.

செயற்குழு உறுப்பினர் ஏ.கே.வேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் காதர், கிருஷ்ணகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் சதீஷ், போச்சம்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளர் துரை, காவேரிப்பட்டினம் ஒன்றிய துணை செயலாளர் பி.சி.குமார், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் சின்னையன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சக்தி முன்னாள் பொருளாளர் முருகேசன், போஸ், அத்திகானூர் அருண், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில், காவேரிப்பட்டினம் நகர கழகச் செயலாளர் கே.எஸ்.அன்வர் நன்றி உரையாற்றினார்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
