நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 09.06.2026 செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு கண்காணிப்பு முகாம் நடைபெற்றது.
தற்போது நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை சார்பாக பணிபுரியும் தன்னார்வலர் சேவை மனப்பான்மையுடன் முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு இளநீர் வழங்கப்பட்டது.


மேலும், கர்ப்பகாலத்தில் போதிய தண்ணீர் அருந்துதல், சத்தான உணவு உட்கொள்ளுதல், வெயில் நேரங்களில் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்த்தல் உள்ளிட்ட உடல்நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணி பெண்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

செய்திகள் ; மணிவண்ணன் எதிரொலி / 8939476777
