ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சூடியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி துபாயில் இறந்து ஒரு மாதமாகியும் உடலை மீட்க முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என குடும்பத்தினர்கள், உறவினர்கள் வலியுறுத்தினர்.

பரமக்குடி அருகே சூடியூரை சேர்ந்த விக்டர் ஆரோக்கியதாஸ் 48. இவர் 2025ல் துபாய் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். மே 5ல் விக்டர் ஆரோக்கிய தாஸ் இறந்து விட்டதாக அலைபேசியில் அவரது மனைவி வினோலியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த தகவலும் தெரியவில்லை.

இது சம்மந்தமாக மனைவி வினோலியா கண்ணீர் மல்க தெரிவித்ததாவது :

என் கணவர் இறப்பிற்கான காரணம் சரியாக தெரியவில்லை. இரு குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய , மாநில அரசுகள் உதவ வலியுறுத்தி மே 14 ல் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

எனது கணவரது உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு நமது மாவட்டத்தின் புதிய கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed