கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மோரணப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று பௌர்ணமியை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் தொடங்கியது. இரவில் ஹோமகுண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டு, ராகு-கேது தோஷங்கள் நீங்கவும், கண் திருஷ்டி கழியவும் பக்தர்கள் ஒவ்வொருவரும் காய்ந்த மிளகாய் வத்தல்களைத் தங்கள் தலைக்கு இடமும் வலமும் சுற்றி யாகத் தீயில் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். யாகத்தின் நிறைவாக, மூலவர் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்தனர்.

செய்திகள்; மாருதி மனோ எதிரொலி / 8939476777
