மெதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த எல்லையம்மன் ஆலயத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பின் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. ராதா ருக்மணி வேணுகோபால பெருமாள் கோயில் மற்றும் கொம்மாத்தம்மன் கோயில்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மெதூர் கிராமத்தில் உள்ள பழமையான எல்லையம்மன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு
கணபதி பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நாளான இன்று காலை, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகப் எடுத்து சென்றனர்.

முதலாவதாக ஸ்ரீஎல்லையம்மன. கோயில் கோபுர கலசங்களு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஒம் சக்தி, பராசக்தி” என பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபட்டனர்.

பின்னர் ராதா ருக்மிணி சமேத வேணுகோபால பெருமாளுக்கு பட்டாட்சியர்கள் புனித நீர் கலசங்களை எடுத்து சென்று கோயில் விமானத்தில் உள்ள கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.அப்போது “கோவிந்தா”, ” கோவிந்தா” என பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

அதன்பின் காவல் தெய்வமன
கொம்மாத்தம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒரே நாளில் 3 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகள் : எழில் / பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed