ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , சட்ட ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
அது சமயம் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கூட்டத்தில், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் , காவல்துறை, வருவாய் துறை உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமு ஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
