தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ராமேஸ்வரத்தில் கொங்கு நாட்டு உணவுத் திருவிழா வரும் மே மாதம் 15-ந்  தேதி முதல் 17-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. 
  
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் அருகில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து  டிடிடீசி கிளைகளிலும் இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
     
கொங்கு மண்டலத்தின் தனித்துவமான சுவையை அறிமுகப்படுத்தும் வகையில், அமுதகம் உணவகத்தில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மிதமான காரம் , இயற்கையான நறுமணத்துடன் கூடிய பாரம்பரிய உயர்தர சைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. ஒரு நபருக்கான கட்டணம் 250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
ராமேஸ்வரம் ஹோட்டல் தமிழ்நாட்டில் குறைந்த வாடகையில் இலவச காலை , இரவு உணவு வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி உள்ள மற்றும் இல்லாத அறைகள், விசாலமான கார் நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
  
இந்த உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்ய📱 95669 68930 , 📱 73581 03766 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 
  
ராமேஸ்வரம் மக்களும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கொங்கு நாட்டு உணவின் சுவையை அனுபவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed