மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர், அசோக் குமார் என்ற இளைஞர் இவர் அப்பகுதிகளில் பசுமை பாதுகாப்பு குறித்த ஒரு ஏற்படுத்துதல் மற்றும் பசுமை பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 வருகின்றன 23-04-2026 அன்று நடைபெற உள்ள சூழலில், தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதனை எடுத்துரைக்கும் விதமாக, மேல அனுப்பானடி பகுதியில் அவருடைய வீட்டு வாசலில் கோலம் இடுவதற்கு பதிலாக,

விதைப்பந்துகள் மூலம் ஓரு விரல் மை ஓவியம் வரைந்து, இந்த பூமிக்கும் மனிதனுக்கு மரங்கள் எவ்வளவு முக்கியமோ அதற்காக மரங்கள் உருவாகிட விதைப்பந்துகள் உதவுகின்றதோ, அது போல நாம் வாக்களிப்பதால் வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்பதனை உணர்த்தும் விதமாக, தரையில் கோலமிட்டு காட்சிபடுத்தி இருந்தார்.
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
