திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளராக சுதாகர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் அம்மா பேரவை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்றும், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத கடன் சுமை தற்போது திமுக ஆட்சியில் இந்த 5 ஆண்டுகளில் 10.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளதே திமுக ஆட்சியின் சாதனை என குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக ஆட்சி செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், எனவே தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுதாகருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் தேர்தல் பொறுப்பாளர் வினோத்,ஒன்றியச் செயலாளர்கள் டி.சி.மகேந்திரன் வி.பி.வேதகிரி, கோதண்டன், , பி.எம்.பிரசாத்,மற்றும் பாமக மாவட்ட செயலாளர் பிரகாஷ் பாமக மாநில நிர்வாகி செல்வராஜ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : லோலகநாதன் எதிரொலி / 8939476777
