ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் இளமனூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறையின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மேற்கொண்டதுடன் , வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பங்கேற்றார்.
     
பேரணியில், 100 -க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். 18-வயது நிறைவடைந்தவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமையாகும் என்பன குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
      
நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர்கள் சித்ராதேவி , ராஜகோபால், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட மகளிர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed