கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆலம்பாடி காட்டுப்பகுதியில் அறுவடை செய்து முட்டாக குவித்து வைத்திருந்த சோளம் தீப்பற்றி கருகி நாசமானது. அப்பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலாக சோளம் பயிரிடப்பட்டிருந்தது.

சோளத்தின் விலை குறைவாக இருந்ததால், விவசாயிகள் அறுவடை செய்த சோளத்தை காட்டுப்பகுதியில் முட்டு முட்டாக குவித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், மர்ம நபர்கள் காட்டுப்பகுதியில் ஒரு இடத்தில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அந்த தீ சுற்றுவட்டார காடுகளில் வேகமாக பரவி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் பத்துக்கும் மேற்பட்ட சோள முட்டுகள் தீயில் கருகி நாசமாகிவிட்டது.
இந்த சம்பவம் ஆலம்பாடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed