கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் பரவலாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களின் ஒன்றான எருது விடும் விழா நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள சிலேப்பள்ளி கிராமத்தில் முதலாம் ஆண்டு எருது விடும் விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

திமுக சட்ட மன்ற உறுப்பினர்களான பிரகாஷ், மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த எருது விடும் விழாவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, வேலூர் , திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்துகொண்டன.

பின்னர் அரசின் வழிகாட்டுதலின் படி அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில் 120 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக ஓடிய எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள். பின்னர் வெற்றிபெற்ற எருதுகளுக்கு முதல் பரிசாக 1 லட்சத்து 50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக 1 லட்சத்து 10 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 80 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.60 ஆயிரம் என 105 பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு எருது விடும் இந்தவிழாவினை உற்சாகமாகக் கண்டு களித்தனர். இந்த எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed