ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள் யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், பெரிய அளவிலான மலைப்பாம்புகள், ராஜ தாகங்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் சாமபல் நிற அணில்கள் சரணாலயமும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக சரணாலயமும் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் புலிகள் கணக்கெடுப்பு. பொதுவான வன விலங்குகள் கணக்கெடுப்பு. பறவைகள் கணக்கெடுப்பு என பல்வேறு வகையான கணக்கெடுப்புகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜனவரி மாதம் சிங்கவால் குரங்கு பற்றி கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிங்கவால் குரங்கு அரிதாகி வருவதால் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 60 ஆண் டுகளுக்குப் பிறகு வருகிற ஜனவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் பகுதியில் வசித்து வரும் சிங்கவால் குரங்குகள் பற்றிய கணக்கெடுப்பு விரைவில் நடைபெற உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சிங்கவால் குரங்குகள் தற்போது மேற்கு
தொடர்ச்சி மலைப்பகு தியில் மிகுந்த அடர்த்தி யான பகுதியில் மட்டுமே காணப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக தறபோது சிங்கவால் குரங்குகள் கணக்கெடுப்பு பற்றிய பயிற்சியும் வனத்துறையினருக்கு மேகமலை புலிகள் காப்பகத்தில் வைத்து அளிக்கப்பட் டுள்ளது. எனவே வருகிற ஜனவரி மாதம் சிங்கவால் குரங்குகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர் கெடுப்பு நடைபெறும்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed