கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய மோட்டூர் கிராமத்தில் வெள்ளிமலையில் வீற்றிருக்கும் ஶ்ரீமுருகர் திருக்கோவில் ஆண்டுத்தோறும் கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு விமர்ச்சியாக கொண்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி மாலை அணிந்து ஆறு நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். விழாவையொட்டி தினந்தோறும் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் மற்றும் ஆன்மிக வழிபாடுகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று கந்தசஷ்டி விழாவினையொட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது

இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருக்கோவில் ஸ்ரீ முருகர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபோகம் விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
இதில் மோட்டூர் பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் சீர்வரிசைத் தட்டுகளுடன் கலந்துக்கொண்டனர். பின்னர் கங்கனம் கட்டுதலுடன் நடைப்பெற்ற இந்த திருமண விழவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த தமிழ்க் கடவுளான ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானை சமேத திருக்கல்யாண வைபோகம் மேள தாளத்துடன் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானையை கிருஷ்ணகிரி . மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவையுடன் அன்னதானமும் நடைப்பெற்றது.

மேலும் இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தர்மகர்த்தா காளியப்பன் முன்னிலையில் அவதானப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மற்றும் நந்தினி பெரியசாமி ஆகியோர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த விழாவில் பெரிய கவுண்டர் கஜேந்திரன், கோவில் பூசாரி பெருமாள், திருமதி ராதா காளியப்பன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான சீனிவாசன், வேல்மணி உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு வழிபட்டனர்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
