திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சின்னக்காவனம் 2 கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட மடிமைகண்டிகை மற்றும் வீராங்கனைவேடு கிராமங்களில் விவசாயம் செய்யும் நிலங்களில் விவசாயிகள் பயிர் நடவு செய்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், போதிய சீரமைப்பு செய்யப்படாமலும் இருப்பதால், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மடிமைகண்டிகை மற்றும் வீரங்கிவேடு கிராமங்களில் உள்ள சுமார் 20 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முழுமையாக மழைநீரில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். பயிரிடுவதற்காகச் செய்த செலவுகள் அனைத்தும் வீணாகி வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததே மழைநீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்திலும் மழைக்காலங்களில் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மடிமைகண்டிகை மற்றும் வீரங்கிவேடு கிராமங்களில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்த விவசாய நிலங்களை வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்,

சேதமடைந்த சுமார் 20 ஏக்கர் விவசாயப் பயிர்களை முறையாக கணக்கெடுத்து உரிய பயிர் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைநீர் தேங்குவதற்குக் காரணமாக உள்ள பழுதடைந்த வாய்க்கால் மற்றும் வடிகால் பாதைகளை உடனடியாகச் சீரமைத்து, விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் தடையின்றி வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் வாய்க்கால்களைத் துார்வாரி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழையால் பயிர்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பலனடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, பாதிக்கப்ட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

